3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சி, பிப்.9-
திருச்சி கோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ் என்கிற மணிகண்டன் (வயது 32).திருச்சி வடக்கு புலிவலத்தை சேர்ந்தவர் பிரசாந்த் என்கிற துரைசாமி (26). இவர்கள் 2 பேர் மீதும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு உள்ளது. மேலும், இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், நாகராஜ் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திலும், பிரசாந்த் ஜீயபுரம் போலீஸ் நிலையத்திலும் ரவுடி பட்டியலில் உள்ளனர். இவர்கள் 2 பேரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரிய வந்ததால் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே வழக்கில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது. திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) ஒன்றில் பயிற்சியாளராக வேலை பார்த்து வந்தவர் அருண் பாபு (36). இவரை முன்விரோதம் காரணமாக கடந்த டிசம்பர் 23-ந் தேதி அங்குள்ள ரேஷன் கடை அருகே 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செவன்ஹில்ஸ் பாலன், பார்த்திபன், முகமது சயிப், அரவிந்தராஜ், சத்திய நாராயணன் என்கிற ஸ்பீடு சத்யா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களில் பார்த்திபன், முகமது சயிப், அரவிந்தராஜ் ஆகியோர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் சத்யநாராயணன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணத்தில் இருந்தது தெரியவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யநாராயணனிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story