மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சின்னம் ஒதுக்கப்பட்டதால் பரபரப்பு


மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சின்னம் ஒதுக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Feb 2022 1:09 AM IST (Updated: 9 Feb 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு வேட்பாளருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சின்னம் ஒதுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கறம்பக்குடி
கறம்பக்குடி பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் 2-வது வார்டில் மல்லிகா, 7-வது வார்டில் தர்மராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு அக்கட்சியின் சின்னமான மூன்று நட்சத்திர கொடி சின்னம் கேட்டு அதற்கான படிவமும் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்ததில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2-வது வார்டு வேட்பாளர் மல்லிகாவுக்கு மூன்று நட்சத்திர கொடி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் 7-வது வார்டு வேட்பாளர் தர்மராஜீக்கு மூன்று நட்சத்திர கொடி சின்னத்துக்கு பதிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த தி.மு.க. கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு வேட்பாளர் மற்றும் அக்கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தனர். இதையடுத்து சின்னத்தை மாற்றி அறிவிப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story