100 நாள் திட்டப்பணியை நிறுத்தியவர் மீது தாக்குதல்


100 நாள் திட்டப்பணியை நிறுத்தியவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 9 Feb 2022 1:15 AM IST (Updated: 9 Feb 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் திட்டப்பணியை நிறுத்தியவர் தாக்கப்பட்டார்

கீரமங்கலம்
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் நேற்று 100 நாள் திட்ட பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்ய சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் உள்ளிட்டோர் குடிதண்ணீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் 100 நாள் பணிகள் மட்டும் நடத்தப்படுகிறது. ஆகவே, முதலில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். அதுவரை 100 நாள் பணிகளை யாரும் செய்யக்கூடாது என்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், 2 மணி நேரத்திற்கும் மேலாக 100 நாள் திட்டப் பணியாளர்கள் பணி செய்யாமல் காத்திருந்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால் அப்பகுதி ஊராட்சி மன்ற உறுப்பினரின் கணவர் ஆனந்த் அங்கு சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் ஆனந்த், சந்திரசேகரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கீரமங்கலம் போலீசில் சந்திரசேகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story