தீக்குளித்த பெண் சாவு


தீக்குளித்த பெண் சாவு
x
தினத்தந்தி 9 Feb 2022 1:43 AM IST (Updated: 9 Feb 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

தீக்குளித்த பெண் இறந்தார்.

உடையார்பாளையம்:
உடையார்பாளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்த அரவிந்தின் மனைவி கண்ணிலா(வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது மண்எண்ணெயை உடலில் ஊற்றி கண்ணிலா தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story