ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தவர் தற்கொலை
திருவட்டார் அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ரகசியமாக வெளியேறி வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ரகசியமாக வெளியேறி வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தொழிலாளி
திருவட்டார் அருகே உள்ள காட்டாத்துறை முத்தாரவிளை பகுதியை சேர்ந்தவர் பிஜூ (வயது53), தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
பிஜூ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனைவியும் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து பிஜூவை கவனித்து வந்தார்.
நடைபயிற்சிக்கு சென்றவர்
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பிஜூ தனது மனைவியிடம் நடைபயிற்சி சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்பு அவர் திரும்பவரவில்லை.
இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி பிஜூவை பல இடங்களில் தேடினார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து நேற்று காலையில் அவரது மனைவி வீட்டுக்கு வந்தார்.
தூக்கில் தொங்கினார்
அப்போது, வீட்டின் உத்தரத்தில் பிஜூ தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story