மார்த்தாண்டம் அருகே காய்கறி வியாபாரியை அரிவாளால் வெட்டி ரூ.48 ஆயிரம் பறிப்பு
மார்த்தாண்டம் அருகே காய்கறி வியாபாரி அரிவாளால் வெட்டி ரூ.48 ஆயிரத்தை பறித்துச் சென்ற 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே காய்கறி வியாபாரி அரிவாளால் வெட்டி ரூ.48 ஆயிரத்தை பறித்துச் சென்ற 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காய்கறி வியாபாரி
மார்த்தாண்டம் அருகே உள்ள மாராயபுரம் சேரிவிளையை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் பிரபின் (வயது 29). இவர் மார்த்தாண்டம் வெட்டுமணி குருசடி அருகே காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு பிரபின் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டார்.
ரூ.48 ஆயிரம் பறிப்பு
மார்த்தாண்டம் அருகே உள்ள சென்னித்தோட்டம் பகுதியில் சென்றபோது, குளக்கச்சியை சேர்ந்த பிபின், மார்த்தாண்டத்தை சேர்ந்த அருண், தேங்காப்பட்டணத்தை சேர்ந்த மற்றொரு பிபின் உள்பட 5 பேர் சேர்ந்து 3 மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.
அவர்கள் பிரபினை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டனர். இதில் அவருக்கு தலையில் வெட்டு விழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அவரிடம் இருந்த ரூ.48 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
போலீஸ் வலைவீச்சு
இதில் படுகாயமடைந்த பிரபின் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பிரபின் கொடுத்த புகாரின் பேரில் பிபின் உள்பட 5 பேர் மீது மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story