மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பாபநாசம்;
பாபநாசம் அருகே நல்லூரில் கிரிசுந்தரி அம்பாள், கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை திருவிழா நடக்கிறது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நேற்று காலையில் மாசி மக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பஞ்சமூர்த்திகள், சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இரவு நாகம், பத்ம வாகனத்தில் சுவாமி திருவீதிஉலா காட்சி நடந்தது.
கொடியேற்ற விழாவில் வேலப்பன் தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி ரங்கராஜன், துணைத் தலைவர் மனோகரன், ரமேஷ் குருக்கள் மற்றும் கிராம மக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story