மெக்கானிக் உள்பட 2 பேர் பலி


மெக்கானிக் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Feb 2022 2:33 AM IST (Updated: 9 Feb 2022 2:33 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வல்லம்;
தஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மெக்கானிக் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாகூர் தர்காவுக்கு சென்றனர்
கரூர் மாவட்டம் தங்கராஜ் நகர் அரசு காலனியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 52). இவர் தனது மனைவி ரகிமா மற்றும் மகள் ஜெரினாபானு, மருமகன் ஷேக்மைதீன், மகன் காசிம், மருமகள் சுல்பிஷா ஆகியோருடன்  நாகூர் தர்காவுக்கு நேற்று முன்தினம் காரில் சென்றார். 
பின்னர் அன்று மாலையே கரூருக்கு அனைவரும் அதே காரில் புறப்பட்டனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை பகுதியில் திருச்சி நோக்கி கார் சென்று கொண்டு இருந்தது.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது
அப்போது சின்னமுத்தாண்டிப்பட்டியை சேர்ந்த மெக்கானிக் அந்தோணிசாமி(54) என்பவர் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். 
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அந்தோணிசாமி சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரிதாப சாவு
மேலும் காரில் இருந்த 3 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை செங்கிப்பட்டி போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 
அங்கு சிகிச்சை பலனின்றி அந்தோணிசாமி(54), சம்சுதீன் மருமகன் ஷேக்மைதீன் ஆகியோர் நள்ளிரவு பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story