போலீஸ் கொடி அணிவகுப்பு
போலீஸ் கொடி அணிவகுப்பு
மதுரை
மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய பதற்றமான பகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மாலை மதுரை மாநகர தெற்கு துணை போலீஸ் கமிஷனர் தங்கத்துரை மேற்பார்வையில் திலகர்திடல் சரக போலீஸ் உதவி கமிஷனர் பழனிக்குமார் தலைமையில் திலகர்திடல் இன்ஸ்பெக்டர்கள் சங்கர்(சட்டம், ஒழுங்கு), சுஜாதா (குற்றப்பிரிவு), கரிமேடு இன்ஸ்பெக்டர்கள் முத்து பிரேம்சந்த் (சட்டம் ஒழுங்கு), சேதுமணிமாதவன் (குற்றப்பிரிவு) மற்றும் 60-க்கும் மேற்பட்ட போலீசார் மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பில் கூடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து பழைய சொக்கநாதர் கோவில், பேச்சியம்மன் படித்துறை, மணிநகரம், மீனாட்சி பஜார் வழியாக நடந்து சென்று மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
அப்போது போலீசார் பொதுமக்களிடம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story