கோபி அருகே வாய்க்காலில் குதித்து அரசு ஊழியர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது


கோபி அருகே வாய்க்காலில் குதித்து அரசு ஊழியர் தற்கொலை- உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 9 Feb 2022 2:45 AM IST (Updated: 9 Feb 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே வாய்க்காலில் குதித்து அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

கடத்தூர்
கோபி அருகே வாய்க்காலில் குதித்து அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. 
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் கருங்கல் மேட்டை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி வள்ளி. பாண்டியனுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லை. இதனால் அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். 
இந்த நிலையில் நேற்று அவர் தனது மனைவி வள்ளியிடம் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். 
தற்கொலை
பின்னர் அவர் கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். அங்குள்ள கரையில் ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  இதை கண்டதும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கீழ்பவானி வாய்க்காலுக்குள் இறங்கி தேடினர். 
கடிதம்
வாய்க்காலில் பாண்டியன் குதித்து தற்கொலை செய்து கொண்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவருைடய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பாண்டியன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கரையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். 
அந்த கடிதத்தில் பாண்டியன், ‘தனக்கு உடல் நிலை சரியில்லை. என்னால் உடல் வேதனையை  தாங்க முடியவில்லை. இதனால் இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன்,’ என உருக்கமாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அந்த கடிதத்தில் தன்னுடைய வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார். 

Next Story