905 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது


905 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 9 Feb 2022 2:49 AM IST (Updated: 9 Feb 2022 2:49 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு 905 எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன என்று கலெக்டர் கூறினார்.

தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு 905 எண்ணிக்கையிலான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளன என்று கலெக்டர் கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்தல் பார்வையாளர் வைத்தியநாதன் ஆகியோர்அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தனர்.
905 வாக்குப்பதிவு எந்திரங்கள்
இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது
தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கு 750 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு பதிவிற்கு பயன்படுத்தப்படும் 905 எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகளும். 905 எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு கருவிகளும் கணினி சுழற்சி முறை அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கனகராஜ். தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரங்கராஜன், மாவட்ட தகவலியல் அலுவலர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ஸ்டான்லி வில்லியம்ஸ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மங்கையற்கரசி, அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story