போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர்;
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கிவைத்தார்.
இலவச பயிற்சி வகுப்பு
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல் துறை சார்பாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு- மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவுக்கு துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை தாங்கினார். பதிவாளர் (பொறுப்பு) மற்றும் தொழில் மற்றும் நில அறிவியல் துறை துறைத்தலைவர் சங்கர் வரவேற்றார்.
பயிற்சி வகுப்பை துணைவேந்தர் திருவள்ளுவன் தொடங்கி வைத்து பேசியதாவது
பல்கலைக்கழக வரலாற்றில் இலவசமாக டி.என்.பி.எஸ்.சி-க்கு பயிற்சி வகுப்பு கொடுப்பது இதுவே முதல் முறையாகும். மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் ஆடவர் விடுதி மற்றும் பெண்கள் விடுதிக்கு கணினி வழங்கப்படும்,
வாரந்தோறும் சனிக்கிழமை இந்த பயிற்்சி சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்படும். பயிற்சி உபகரணங்கள் இலவசமாக கொடுக்கப்படும். இதை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் டி.ஜி.பி.
சிறப்பு விருந்தினராக சமூக நீதி மற்றும் மனித உரிமை துறை கூடுதல் டி.ஜி.பி.விஜயலட்சுமி சங்கர் கலந்து கொண்டு பேசுகையில், பல்கலைக்கழக பருவம் ஒவ்வொரு மாணவருக்கும் மிகு முக்கியமான தருணம், ஆழமாக கற்றல், நிறைய புத்தகங்கள் படித்தல், கலந்துறையாடல் வகுப்புகளுக்கு முறையாக செல்லுதல் மற்றும் நல்ல வேலைவாய்பில் உள்ளவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும். என்றார்.
விழாவில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ அழகுராஜா, இலக்கியத்துறை பேராசிரியர் இளையாப்பிள்ளை, இந்திய மொழிகள் ஒப்பிலக்கிய துறைத்தலைவர் சபிதா, மொழிபெயர்ப்புத் துறை பேராசிரியை விஜய ராஜேஸ்வரி, பழங்குடி மக்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த சிவராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
முடிவில் தாரணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story