பெங்களூருவில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.80 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் - போலீஸ் கமிஷனர் கமல்பந்த் தகவல்
பெங்களூருவில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறியுள்ளார்.
பெங்களூரு:
போரை நடத்துவது அவசியம்
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
நான் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்கும் முன்பு நகரில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. இதற்கு எதிராக போர் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது உள்துறை மந்திரியாக இருந்த பசவராஜ் பொம்மையும் போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
கடந்த 2 ஆண்டுகளில் பெங்களூருவில் ரூ.80 கோடி மதிப்பிலான 7,500 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளோம். தற்போது நகரில் போதைப்பொருட்கள் விற்பனை குறைந்து உள்ளது. ஆனாலும் போதைப்பொருளுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்துவது அவசியம்.
போதைப்பொருட்கள் அழிப்பு
நகரில் பல்வேறு குழுவினர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரவுடிகளும் போதைப்பொருள் விற்பனை செய்கின்றனர். ஆனால் போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலின் தலைவன் பெங்களூருவில் இல்லை. நமது நாட்டின் கிழக்கு பகுதிகள், வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
டார்க் வெப் இணையதளம் மூலம் தான் போதைப்பொருட்கள் அதிகளவில் வாங்கப்படுகின்றன. தற்போது போதைப்பொருள் விற்பனையாளர்கள் பல்வேறு வடிவில் போதைப்பொருட்களை விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.50 கோடி போதைப்பொருட்கள் கோர்ட்டு அனுமதியுடன் அழிக்கப்பட்டன.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.
Related Tags :
Next Story