சேலத்தில் 16-ந் தேதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம்

சேலத்தில் 16-ந் தேதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம்
x
தினத்தந்தி 9 Feb 2022 3:34 AM IST (Updated: 9 Feb 2022 3:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வருகிற 16-ந் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடசியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்கிறார்.

சேலம்:
சேலத்தில் வருகிற 16-ந் தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடசியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம் செய்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிரசாரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். அந்த வகையில், வருகிற 16-ந் தேதி சேலத்தில் அவர் பிரசாரம் மேற்கொள்ள வருகிறார்.
அன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்கிறார்.
திருச்சி சிவா எம்.பி.
இதேபோல் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.முக. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

Next Story