சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது
சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூரமங்கலம்:
சேலம் வழியாக சென்ற ரெயிலில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரெயில்வே போலீசாரும், பாதுகாப்படை படையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்புலனாய்வு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீஸ்காரர்கள் கமலநாதன், சவுந்தரராஜன், குணசீலன், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட சிறப்பு தனிப்படையினர் சேலத்தில் ரெயிலில் ஏறி சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்திய போது, சங்ககிரி அருகே ரெயில் சென்ற போது எஸ்-10 என்ற பெட்டியில் சந்தேகப்படும்படியாக 2 பேர் அமர்ந்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பைகளை போலீசார் சோதனை நடத்தினர்.
2 பேர் கைது
அந்த பையில் 21 கிலோ கஞ்சா இருந்தது. அவை பாக்கெட்டுகளாக இருந்தன. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அங்கிருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் வயநாடு அருகே கப்பிக்கலாம் பகுதியைச் சேர்ந்த ராகுல் மனோஜ் (வயது 21), மற்றொருவர் பாலக்காடு மாவட்டம் மணக்காடு முத்துக்குருஷி பகுதியைச் சேர்ந்த ரெனில் பிஜு (20) என்பது தெரியவந்தது,
உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story