சேலம் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் வெள்ளி கொலுசுகள் பறிமுதல்-தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
சேலம் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
சூரமங்கலம்:
சேலம் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.20 லட்சம் வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
பறக்கும் படை சோதனை
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் அருகில் தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள், கார்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சேலம் அருகே உள்ள சிவதாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரது மோட்டார் சைக்கிளில் ஏராளமான வெள்ளி கொலுசுகள் இருந்தன. அவை சிறு, சிறு வேலைகளுக்காக எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.
ஆனாலும் அதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் ஆனந்தராஜிடம் இல்லை. எனவே அவரிடம் இருந்து 32 கிலோ வெள்ளி கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கருவூலத்தில் ஒப்படைப்பு
அந்த வெள்ளி கொலுசுகளை பறக்கும் படையினர் சூரமங்கலம் மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் கொலுசுகளுக்கான ஆவணங்களை காட்டி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வெள்ளி கொலுசுகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் ஆத்தூர் அருகே டைல்ஸ் வியாபாரியிடம் இருந்து ரூ.16¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இப்படி தொடர்ந்து பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story