புனித லூர்து அன்னை தேவாலயத்தில் தேர் பவனி
புனித லூர்து அன்னை தேவாலயத்தில் தேர் பவனி
சேவூர் அருேக புளியம்பட்டி புனித லூர்து அன்னை தேவாலயத்தில் தேர் பவனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித லூர்து அன்னை தேவாலயம்
அவினாசியை அடுத்த சேவூர் அருகே புளியம்பட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் லூர்துபுரம் கிராமம் உள்ளது. இங்கு புனித லூர்து அன்னையின் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் என்றும் வற்றாத நீருற்று கிணறு உள்ளது. அதனால் இந்த தேவாலயத்தை புனித நீருற்று லூர்து அன்னை திருத்தலம் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தேர்த்திருவிழா பவனி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர்பவனி நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட பொருளாளர் ஜோ.பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி முடிந்து அன்னையின் திருக்கொடி பவனியாக எடுத்து வரப்பட்டு காலை 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.
தேர் பவனி
வருகிற 15ந்தேதி மாலை 6 மணிக்கு, ஜெபமாலை, ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறும். இதையடுத்து இரவு 8 மணிக்கு அலங்கார தேர் பவனி நடைபெறும். 16ந்தேதி கோவை ஆயர் எல்.தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் காலை 8.30 மணிக்கு திருப்பலியும், காலை 11 மணி, மாலை 5 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும், அதைத்தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை விக்டர் சந்தியாகு, உதவி பங்குதந்தை சிஜி ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story