அமராவதி பழைய ஆயக்கட்டு பாசத்திற்கு தண்ணீர் விட வேண்டும்
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசத்திற்கு தண்ணீர் விட வேண்டும்
மடத்துக்குளம் பழைய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன நீர் வினியோகத்தை அடுத்த மாதம் 31 ந் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
மடத்துக்குளம் அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் குறுவை சம்பா ஆகிய 2 பருவத்தில் 6 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக நெல் நடவு செய்யப்படுகிறது. குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு பகுதியிலுள்ள அமராவதி கிளை வாய்க்கால்கள் வாயிலாக நெல்நடவு செய்யப்பட்ட விளைநிலங்களுக்கு அமராவதி அணையிலிருந்து பாசன நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சம்பாபருவத்தில் நடவு செய்யப்பட்ட நெல் விதைகள் தற்போது வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கிளை வாய்க்கால் பாசன நீர் பயன்படுத்து விவசாயிகள் சங்க கூட்டம் நேற்று மடத்துக்குளம் ஆய்வாளர் மாளி கையில் நடந்தது. இதில் பல கிராம விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
பாசன நீர்
மடத்துக்குளம் பகுதியில் பல நூறு ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் வளர்ந்துள்ளன. பல விளைநிலங்களில் நிலை பயிராகவும் உள்ளது. இதனால் இன்னும் பல நாட்களுக்கு நீர் வினியோகம் தேவைப்படுகிறது. இதற் காக அடுத்த மாதம் மார்ச் 31 ந் தேதி வரை அமராவதி பழைய ஆயக்கட்டு கிளை வாய்க்காலில் பாசனநீர் திறந்து விட ேவண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story