வாக்குச்சாவடி சீட்டு வினியோகத்தை தேர்தல் அலுவலர் ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி சீட்டு வினியோகத்தை தேர்தல் அலுவலர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்யும் பணியை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 402 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்தவற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வாக்காளர்களின் பெயர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவை அடங்கிய வாக்காளர் சீட்டு அச்சடிக்கும் பணி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடி சீட்டுக்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
ஆய்வு
அவர்கள் நேற்று முன்தினம் முதல் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு வினியோகம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். அதன்படி நேற்று காலையிலும் மாநகராட்சி முழுவதும் அலுவலர்கள் வாக்குச்சாவடி சீட்டு வினியோகத்தில் ஈடுபட்டனர்.
இந்த பணிகளை மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் ரகுமத்துலாபுரம் மேற்கு, வடக்கு ரத வீதி தொடர்ச்சி, சிவன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு செய்தார்.
விரைந்து வாக்குச்சாவடி சீட்டுகளை வினியோகம் செய்யவும் அறிவுறுத்தினார்.
Related Tags :
Next Story