தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 9 Feb 2022 6:07 PM IST (Updated: 9 Feb 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் நடந்தது

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமையில் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள 402 வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
பிரச்சினை
கூட்டத்தில் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், முக்கிய சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. போலீசார் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகளை வழங்கினார்.
கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ் (தூத்துக்குடி நகரம்), ஜெயராம் (மாவட்ட குற்றப்பிரிவு), சம்பத் (நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
----------

Next Story