இந்திர விமானத்தில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவில் இந்திர விமானத்தில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:-
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழாவில் இந்திர விமானத்தில் சந்திரசேகரர் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம் என தலபுராணம் கூறுகிறது. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர் அலங்கார பணிகள்
விழாவில் வருகிற 13-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேரை அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story