இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம்


இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம்
x
தினத்தந்தி 9 Feb 2022 6:18 PM IST (Updated: 9 Feb 2022 6:18 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம்

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 55 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் வருகிற 15ந் தேதி திருப்பூரில் நடக்கிறது.
வாகனங்கள் ஏலம்
திருப்பூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 24 நான்கு சக்கர வாகனங்கள், 31 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 55 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 15 ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லிகவுண்டன் நகரில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளது.
இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு மற்றும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி முககவசம் அணிந்து வரவேண்டும். நுழைவு கட்டணமாக ரூ.100ம், முன்பணமாக இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 மற்றும் 4 சக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாகன ரசீது 
14ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலத்தில் கலந்துகொள்ள ரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் ரொக்கமாக அன்றே செலுத்த வேண்டும். ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீது தான் அந்த வாகனத்தின் உரிமை ஆவணம் ஆகும்.
ஏல ரசீது எந்த பெயரில் பெறப்படுகிறதோ அவரே ஏலத்தில் கலந்துகொள்ளவேண்டும். அவர் பெயரிலேயே வாகனத்துக்கான உரிமை ரசீது வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டரை 94431 11836 தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

Next Story