லாரி-மினி வேன் மோதல்; 3 பேர் பலி - 12 பேர் படுகாயம்


லாரி-மினி வேன் மோதல்; 3 பேர் பலி - 12 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 9 Feb 2022 6:41 PM IST (Updated: 9 Feb 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

மேல்மருவத்தூர் அருகே லாரி-மினிவேன் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பக்கத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 30). இவர், தனது குடும்பத்தினருடன் தனது மினி வேனில் மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் உசிலம்பட்டி அடுத்த டி.உசிலம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலில் காதுகுத்து விழா முடிந்து, மீண்டும் அனைவரும் சென்னை திரும்பினர். மினிவேனை டிரைவர் பாண்டியன் ஓட்டினார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் மேல்மருவத்தூர் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது இவர்கள் வந்த மினி வேன் பயங்கரமாக மோதியது.

இதில் மின் வேன் நொறுங்கியது. இந்த விபத்தில் தங்கபாண்டியன், அவருடைய மாமனார் வீரன் (60), மகள் யாழினி (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மேலும் இந்த விபத்தில் வேன் டிரைவர் பாண்டியன், தங்க பாண்டியனின் மனைவி திவ்யா, அவரது உறவினர்களான ராமு, ரமேஷ், அமுதா, பச்சையம்மாள், ஜோதி, ஹரிதா, ஆர்த்தி, பிரபாகரன், தமிழ், தீபிகா ஆகியோர் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு மற்றும் மேல்மருவத்தூர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி மேல்மருத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story