இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கட்டபெட்டு வனச்சரகத்துக்கு உட்பட்ட எல்லநள்ளி கிராமத்தில் சிறுத்தைப்புலி உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் நீலகிரி மாவட்ட வன அலுவலர் போஸ்லே சச்சின் துக்காராம் முன்னிலையில் குன்னூர் கால்நடை டாக்டர் வெங்கடேஷ். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் ஆகியோர் சிறுத்தைப்புலி உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதே பகுதியில் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்தது 12 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைப்புலி ஆகும். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு ஆகிய காரணங்களால் இறந்து இருக்கலாம். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story