டாஸ்மாக் மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்


டாஸ்மாக் மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 9 Feb 2022 7:45 PM IST (Updated: 9 Feb 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 76 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் உமேஷ் பணியாற்றி வந்தார். 

இவர் பணி நேரத்தில் வெளியே செல்வதாகவும், சரிவர பணியை மேற்கொள்வது இல்லை என்றும் புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து உயர் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது டாஸ்மாக் கடையில் அவர் தனது பணியை முறையாக மேற்கொள்ளாமல் இருந்ததும், வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை முறையாக பராமரிக்காததும் தெரியவந்தது. இதையடுத்து நீலகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சேகர், மேற்பார்வையாளர் உமேசை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story