'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Feb 2022 9:16 PM IST (Updated: 9 Feb 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டி 89396 58888 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி' புகார் பெட்டி 89396 58888 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிப்பறை பராமரிப்பு
பழனி சத்யாநகரில் உள்ள பொதுக்கழிப்பறை முறையாக பராமரிப்பு செய்யப்படுவது இல்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறையை முறையாக பராமரிக்க வேண்டும்.
-நாகராஜ், பழனி.
மின்சார வசதி எப்போது கிடைக்கும்?
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அருகே உள்ள வேளாண்பண்ணை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இந்த கிராமத்தில் மின்சார வசதி இல்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே மின்சார வசதி செய்து தரவேண்டும்.
-ஆண்டிப்பன், சிறுமலை.
கொசுத் தொல்லை
போடி தாலுகா சிலமலைக்கிராமத்தில் கொசுத்தொல்லை அதிகரித்து விட்டது. கொசுக்கள் கடித்து தோலில் தடிப்பு போன்று ஏற்படுகிறது. எனவே கொசுக்களை ஒழிக்க மருந்து புகை மருந்து அடிக்க வேண்டும்.
-நாகேந்திரன், சிலமலை.
எரியாத தெருவிளக்குகள்
குஜிலியம்பாறை தாலுகா டி.கூடலூர் ஊராட்சி கலிங்கம்பட்டியில் விநாயகர் கோவில் அருகிலும், புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அருகிலும் உள்ள தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதிகள் இருளில் மூழ்கி விடுகின்றன. இதனால் மக்கள் நடமாடவே பயப்படுகின்றனர். இந்த தெருவிளக்குகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, குஜிலியம்பாறை.

Next Story