வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பார்வையிட்ட மாணவ-மாணவிகள்
திண்டுக்கல்லுக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லுக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
அலங்கார ஊர்திகள்
சென்னையில் கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று, சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட தமிழக வீரர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘விடுதலை போரில் தமிழகம்' என்ற தலைப்பில் 3 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன.
அப்போது இந்த ஊர்திகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர், கலெக்டர் வரவேற்பு
அதன்படி, வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நேற்று திண்டுக்கல்லுக்கு வந்தது. முன்னதாக நேற்று முன்தினம் தேனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த ஊர்தி கொடைக்கானல் காட்ரோடு, வத்தலக்குண்டு, செம்பட்டி வழியாக திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை வந்தது. பின்னர் பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக அந்த ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டது.
அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் வேலுநாச்சியார் ஊர்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க ஊர்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதமாதா போல் வேடமிட்ட ஒரு மாணவி கையில் தேசிய கொடியுடன் வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி முன்பு நிற்க, அவர் அருகில் 2 மாணவிகள் 'செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடலுக்கு நடனமாடி அசத்தினர்.
போராட்ட வரலாறு
இந்த ஊர்தியின் முகப்பில் தமிழகத்தின் வேலூர் கோட்டையில் 1805-ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி, ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரமுடன் போர் புரிந்த மருது சகோதரர்கள், சிவகங்கையை மீட்ட வீரமங்கை வேலு நாச்சியார், அவரது போர்ப்படையில் பெண்கள் படைக்கு தலைமையேற்று, வெள்ளையர்களின் ஆயுதக்கிடங்கினை அழித்து வீரமரணம் அடைந்த குயிலி, ஆங்கிலேயர்களின் ஆட்சியினை எதிர்த்து போரிட்டு தூக்கு கயிற்றினை வீரமுடன் ஏற்றுக்கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய வீரன் சுந்தரலிங்கம், அன்னிய படைகளை தனியாக சென்று அழித்த வீரர் ஒண்டிவீரன். வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவன், பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டுவதை தடுத்த கட்டாலங்குளம் மன்னர் மாவீரன் அழகு முத்துக்கோன், மாவீரர்கள் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோவில் கோபுரம் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வரும் வகையில் உயிரோட்டமாக சிலைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
‘செல்பி' எடுத்தனர்
இந்த ஊர்தியை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள், பொதுமக்கள் வந்து பார்வையிட்டனர். பின்னர் ஊர்தி முன்பு நின்று தங்களது செல்போனில் ‘செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார், காந்திராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், ஆர்.டி.ஓ. காசிசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த அலங்கார ஊர்தி, பின்னர் தர்மபுரி நோக்கி புறப்பட்டு சென்றது.

Related Tags :
Next Story