தமிழக மீனவர்களின் மேலும் 8 படகுகள் ஏலம்
இலங்கை கிளிநொச்சி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்களின் மேலும் 8 படகுகள் ஏலம் விடப்பட்டன.
ராமேசுவரம்,
இலங்கை கிளிநொச்சி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்களின் மேலும் 8 படகுகள் ஏலம் விடப்பட்டன.
சிறைபிடிப்பு
இலங்கை கடற்படையால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை கடந்த 7-ந்் தேதி முதல் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் காரைநகர் கடற்படை முகாமில் நடந்த ஏலத்தில் ராமேசு வரம், பாம்பன், மண்டபம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 135 படகுகள் ஏலம் விடப்பட்டுள்ளன.
இந்த படகுகளை இலங்கையில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் போட்டி போட்டு வாங்கி உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கடற்படை முகாமில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்களின் 8 படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டது.
143 படகுகள்
இந்த படகுகளை அங்குள்ள மீனவர்கள் ரூ. 94 ஆயிரத்து 800 செலுத்தி படகுகளை விலைக்கு வாங்கி எடுத்துச் சென்றனர். நேற்றுவரை இலங்கையில் தமிழக மீனவர்களின் 143 படகுகள் ஏலம் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story