தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 9 Feb 2022 10:10 PM IST (Updated: 9 Feb 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.

இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
திருவாரூர் மாவட்டம் வைப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. அதில் போலீசார் அவ்வப்போது பிடிக்கின்ற கனரக வாகனங்களை, மக்கள் செல்கின்ற பாதையில் இடையூராக நிறுத்தியுள்ளனர். இதனால்  சாலையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளிக்கூடங்களுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒரு சிலர் போக்குவரத்து நெரிசலில் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினேஷ், திருவாரூர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
திருவாரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் கடைகளை அமைத்து வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டி அசுத்தப்படுத்தி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதகாரிகள் பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகள் நலன் கருதி பஸ்நிலையத்தின் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தொற்று நோய் பரவுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.


Next Story