ஆபத்தை உணராமல் பஸ் படியில் பயணம் செய்யும் மாணவர்கள்
நன்னிலத்தில் ஆபத்தை உணராமல் பஸ் படியில் மாணவர்கள் பயணம் செய்தனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்னிலம்:
நன்னிலத்தில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நன்னிலம் முதல் வெள்ளமண்டபம் வரை அரசு சிறப்பு பஸ் தினமும் காலை, மாலை நேரங்களில் சென்று வருகிறது. தற்போது பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடியும் போதும் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அப்போது மாணவர்கள் பஸ் படிகளில் தொங்கிய நிலையில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மாணவர்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைபிடிக்காமலும் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். எனவே உயிர்சேதம் அபாயம் உள்ளதால் பஸ் படிகளில் பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story