காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்


காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 9 Feb 2022 10:20 PM IST (Updated: 9 Feb 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்

வாய்மேடு:-

நாகை மாவட்டம் தலைஞாயிறில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி செய்வது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார். உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்தி முன்னிலை வகித்தார். வட்டார அட்மா திட்ட மேலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் பாதுகாக்கப்பட்ட காய்கறி சாகுபடி செய்வது குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்தி விளக்கம் அளித்தார். இந்த நிகழ்ச்சியில் அட்மா திட்ட உதவி மேலாளர் மாசேதுங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் கனிமொழி நன்றி கூறினார்.

Next Story