திருவாரூரில் தர்ப்பூசணி விற்பனை மும்முரம்


திருவாரூரில் தர்ப்பூசணி விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 9 Feb 2022 10:21 PM IST (Updated: 9 Feb 2022 10:21 PM IST)
t-max-icont-min-icon

கோடைக்காலத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் திருவாரூரில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்:
கோடைக்காலத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் திருவாரூரில் தர்ப்பூசணி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து மக்களை வாட்டி வதைப்பது வழக்கம். மழை காலத்தை விட வெயில் காலத்தின் கொடுமைகளை சாமளிப்பது சிரமமானது. வெயிலின் உஷ்னத்தால் சளி, காய்ச்சல், தோல் சம்பந்தமான நோய்களால் பொதுமக்கள் சிரமப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு கோடை காலத்திற்கு முன்பே பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை தணிக்க தர்ப்பூசணி, இளநீர், பழச்சாறு ஆகியவற்றை பொதுமக்கள் நாடி செல்கின்றனர். தற்போது தர்ப்பூசணி பழங்கள் வரத்து தொடங்கியது.
தர்ப்பூசணி விற்பனை மும்முரம்
திருவாரூர் தெற்குவீதியில் உள்ள பழக்கடை ஒன்றில் தர்ப்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தர்ப்பூசணி விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், திண்டிவனம் பகுதியில் இருந்து தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு மழையினால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பழங்களின் விலை சற்று அதிகரித்துள்ளதால்   கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது தர்ப்பூசணி அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது. அடுத்த மாதம் வரத்து அதிகரிக்கும் நிலையில் விலை குறைய வாய்ப்பு உள்ளது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் பழங்களை வாங்கி செல்வதால் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது என்றார். 

Next Story