42 ஆயிரம் எக்டேரில் சம்பா அறுவடை
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரம் எக்டேரில் சம்பா அறுவடை முடிந்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 42 ஆயிரம் எக்டேரில் சம்பா அறுவடை முடிந்துள்ளது.
42 ஆயிரம் எக்டேர் சம்பா அறுவடை
திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை பணிகள் கடந்த மாதம் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 42 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா அறுவடை முடிவடைந்துள்ளது. அறுவடை எந்திரங்களின் வாடகை அதிகமாக இருந்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,700 வரை தர வேண்டியுள்ளது. மேலும் கொள்முதல் ஆன்லைன் முறையில் சற்று தாமதமாகிறது என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
வாடகையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்,
தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்பட்ட சம்பா பயிர் பருவ கால மழையினால் பாதிக்கப்பட்டதால் மகசூல் என்பது ஏக்கருக்கு 20 மூட்டைக்கு கீழ் தான் கிடைத்து வருகிறது. இதில் தனியார் அறுவடை எந்திரங்கள் வாடகை என்பது ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,700 வரை தர வேண்டியுள்ளது. எனவே தனியார் அறுவடை எந்திரத்தின் வாடகையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஆன்லைன் முறையில் கொள்முதல் என்பது விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது. வியாபாரிகள் தலையீடு என்பது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் பதிவு முறையில் சர்வர் பிரச்சினையால் நெல்லை கொள்முதல் விற்பனை செய்வதிலும், விற்பனை செய்த நெல்லுக்கு உரிய பணம் பெறுவதிலும் சற்று தாமதமாகிறது. இந்த குறைபாடுகளை அரசு கலைந்திட வேண்டும் என்றார்.
---
Related Tags :
Next Story