நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 341 வாக்குப்பதிவு எந்திரங்கள்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 341 வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 9 Feb 2022 10:41 PM IST (Updated: 9 Feb 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 341 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 341 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை  முன்னிட்டு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில்  நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர் ஆனந்த்மோகன் முன்னிலை வகித்தார். அப்போது நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:-
341 வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருவாரூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகளில் 209 வாக்குப்பதிவு எந்திரங்கள், பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகளில் 132 வாக்குப்பதிவு எந்திரங்கள் என மொத்தம் 341 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 282 வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தேசிய தகவல் மைய மேலாளர் புகழேந்தி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
---


Next Story