போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
கொரடாச்சேரியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
கொரடாச்சேரி:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடக்கும் தேர்தல் வாக்குப்பதிவு நாளில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில்
மாவட்டம் முழுவதும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரடாச்சேரி பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன், பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கருதப்படும் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். அப்போது நடைபெற உள்ள கொரடாச்சேரி பேரூராட்சி தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றியும், பதற்றம் இ்ன்றியும் வாக்களிக்கலாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story