ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ2 லட்சம் பறிமுதல்


ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 9 Feb 2022 10:52 PM IST (Updated: 9 Feb 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்த ரூ2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர்:
ஓசூர் அருகே கர்னூர் ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி லட்சுமிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த கிருஷ்ணசந்திர சாகு என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஓசூர் அருகே உளிவீரனப்பள்ளியில் உள்ள கிரசர் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள், உரிய ஆவணமின்றி காரில் கொண்டு வந்த பணத்தை பறிமுதல் செய்தனர். 

Next Story