வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல்
மணலூர்பேட்டையில் வாலிபரிடம் ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருக்கோயிலூர்,
ரிஷிவந்தியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகர்பாபு தலைமையிலான தேர்தல் பறக்கும்படையினர் மணலூர்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சங்கராபுரம் தாலுகா சீர்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மணிகண்டன்(வயது 22) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்து 540-ஐ தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், மணலூர்பேட்டை பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story