நடுரோட்டில் பஸ் கவிழ்ந்து 11 பேர் காயம்
சங்கராபுரம் அருகே நடுரோட்டில் பஸ் கவிழ்ந்து 11 பேர் காயமடைந்தனா்.
சங்கராபுரம்,
சென்னையில் இருந்து சங்கராபுரம் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் சங்கராபுரம் அருகே குளத்தூர் பிரிவு சாலையில் நேற்று இரவு 9 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் 9 பயணிகள், டிரைவர் வீரன், கண்டக்டர் திருப்பாலபந்தலை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று, விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story