வெளியூர்களில் வசிக்கும் உள்ளூர் வாக்காளர்களை தேடும் வேட்பாளர்கள்


வெளியூர்களில் வசிக்கும் உள்ளூர் வாக்காளர்களை தேடும் வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 9 Feb 2022 11:26 PM IST (Updated: 9 Feb 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

வெளியூர்களில் வசித்து வரும் உள்ளூர் வாக்காளர்கள் குறித்து விவரம் சேகரித்து அவர்களை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேடி வாக்குசேகரித்து வருகின்றனர்.

காரைக்குடி, 
வெளியூர்களில் வசித்து வரும் உள்ளூர் வாக்காளர்கள் குறித்து விவரம் சேகரித்து அவர்களை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேடி வாக்குசேகரித்து வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த கடந்த மாதம் 28-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி கடந்த 4-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. இந்தநிலையில் ஒவ்வொரு வார்டுகளில் போட்டி யிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு தற் போது பிரசாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 
இதனால் தற்போது உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன.
 இளையான்குடி, நாட்டரசன் கோட்டை, திருப்புவனம், கானாடுகாத்தான், கண்டனூர், கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய 11 பேரூராட்சிகள் உள்ளன. நகராட்சி தேர்தலில் மொத்தம் 117 வார்டு உறுப்பினர்களும், பேரூராட்சி தேர்தலில் 168 வார்டு உறுப்பினர்கள் சேர்த்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி நகர்புற தேர்தலில் மொத்தம் 285 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வெளியூரில் வசிக்கும் வாக்காளர்கள்
இதையடுத்து இந்த வார்டில் தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் தற்போது வீடு, வீடாகவும், சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். 
மேலும் தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் புதிதாக சேர்ந்த வாக்காளர்கள் குறித்த விவரம் மற்றும் தற்போது உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையும், அதில் எத்தனை வாக்காளர்கள் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறித்த விவரங்களை வேட்பாளர்கள் சேகரித்து வருகின்றனர். 
வாக்கு சேகரிப்பு
இவ்வாறு விவரங்கள் மற்றும் வெளியூரில் வசிக்கும் வாக்கா ளர்களை தொடர்பு கொண்டு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடக்கும் தினத்தன்று தவறாமல் வந்து ஓட்டு போடுமாறு கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Next Story