நகராட்சி பேரூராட்சி அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


நகராட்சி  பேரூராட்சி அலுவலகங்களில்  மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Feb 2022 11:36 PM IST (Updated: 9 Feb 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி பேரூராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


விழுப்புரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்படுகின்றன.
தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.

வாக்குப்பதிவு எந்திரங்கள்

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 155-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 155-ம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 80-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 80-ம், கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 34-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 34-ம் சரக்கு வாகனங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.அதேபோல் வளவனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 20-ம், விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 17-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 17-ம், செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 39-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 39-ம், அனந்தபுரம் பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 18-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 18-ம், அரகண்டநல்லூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 14-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 14-ம், மரக்காணம் பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 24-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 24-ம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 18-ம், கட்டுப்பாட்டு கருவிகள் 18-ம் சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்டு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சி அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் இறக்கி வைக்கப்பட்டு அந்த அறை தேர்தல் நடத்தும் அலுவலரால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தலுக்கு முந்தைய நாளான வருகிற 18-ந் தேதியன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story