கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 9 Feb 2022 11:50 PM IST (Updated: 9 Feb 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். 

தொடர்ந்து கொத்தடிமை முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். 
மேலும் கொத்தடிமை தொழிலாளர் முறையில் இருந்து மீட்கப்பட்ட வந்தவாசி தாலுகா மீசநல்லூர் கிராமத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் கலெக்டரை சந்தித்து தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். 

மேலும் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.  நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அருள், சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன், சர்வதேச நீதி குடும்பம் அலுவலர் ஜெனிபா மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story