பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன. துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2022 11:55 PM IST (Updated: 9 Feb 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக துணைபோலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் காவல்துறை சார்பில் குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு அளித்தால் செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு காவலன்செயலி, 181, 1098 ஆகிய தொலைபேசி எண்களின் செயல்பாடு பற்றியும் விளக்கி கூறப்படுகிறது. 

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பஸ், ரெயில் நிலையங்கள், பெண்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் என்று கடந்த டிசம்பர் மாதம் 96 இடங்கள், ஜனவரி மாதம் 82 இடங்கள், பிப்ரவரி மாதம் இதுவரை 19 இடங்கள் என்று மொத்தம் 197 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

 இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அல்லது 181, 1098 தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பெண்களுக்கு உதவி செய்ய 17 போலீஸ் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் உள்ளது என்று குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Next Story