வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்த 2 பேர் கைது


வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2022 11:57 PM IST (Updated: 9 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம், செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

ஆரணியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 37), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நண்பரை சந்திக்க வேலூருக்கு வந்தார். பின்னர் அவர் ஆரணிக்கு பஸ்சில் செல்வதற்காக வேலூர் பழைய பஸ்நிலையத்தை நோக்கி மண்டித்தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ஏகாம்பரம் வைத்திருந்த ரூ.3 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பியோடினர்.

இதுகுறித்து ஏகாம்பரம் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டித்தெருவில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஏகாம்பரத்திடம் வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்த மோகன் (21), சுபாஷ் (22) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

Next Story