அரக்கோணத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில்
அரக்கோணத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
அரக்கோணத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்கக்கோரியும் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள பொது மக்கள் திடீரென பழனி பேட்டை காந்தி ரோட்டில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சினிவாசன் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆசீர்வாதம் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விரைவில் நடவடிக்கை
அப்போது ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட பைப் லைன்கள் பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாகவும். தக்கோலம் நீரேற்று நிலையம் மட்டுமே செயல்படுவதால் போதிய குடிநீர் வழங்க முடியவில்லை. பொய்கைப்பாக்கம் அருகே பைப் லைன் உடைப்பு சரி செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் இருப்பதால் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இன்த மறியல் கரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story