சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக்கோரி நகராட்சி வேட்பாளர்கள் சாலை மறியல்
சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக்கோரி நகராட்சி வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சோளிங்கர்
சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக்கோரி நகராட்சி வேட்பாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. 116 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.
இங்கு பதிவாகும் வாக்குகள் ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் பரந்தாமன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசுகையில் அலுவலர் பேசுகையில் வேட்பாளர்கள் தங்களது செலவின கணக்கை தினம் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
சாலை மறியல்
வேட்பாளர்கள், சோளிங்கர் நகராட்சியில் பதிவாகும் வாக்குகளை சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்து வாக்கு எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு தற்போது ராணிப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த வேட்பாளர்கள் சோளிங்கர் -வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்க வில்லை.
அவர்களுடன் தேர்தல் அதிகாரிகள், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் தெரிவித்ததாகவும், அவர் தெரிவிக்கும் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story