கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 10 Feb 2022 12:43 AM IST (Updated: 10 Feb 2022 12:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.

நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் தலைமையில் அரசு அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) கணேஷ்குமார், (நிலப்பிரிவு) ஷேக் அயூப்கான், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாசலம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையாளர் (நிர்வாகம்) வெங்கட்ராமன் தலைமையில் அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் கமிஷனர் துரைக்குமார் தலைமை தாங்கினார். இதில் நெல்லை மாநகர குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் சங்கர், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி கமிஷனர் ஆறுமுகம், நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீசார் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story