ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம்:
கர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிவதை தடை செய்து அவர்களின் மத உரிமையை பறித்த கல்லூரி நிர்வாகத்தையும், ஆளும் பா.ஜ.க. அரசையும் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோட்டைப்பட்டினம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டைப்பட்டினம் கிளை தலைவர் அயூப் கான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கர்நாடகா அரசை கண்டித்தும், கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story