புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி


புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 10 Feb 2022 12:48 AM IST (Updated: 10 Feb 2022 12:48 AM IST)
t-max-icont-min-icon

புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி நடைபெற்றது.

கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம். தை மாதம் கிராமத்தில் அறுவடை நடைபெறும் காலமாக இருப்பதால் இதை சிறப்பாக கொண்டாடாமல் 7 தேர் பவனி வர வேண்டிய நிலையில் பழமை மாறாமல் இருப்பதற்காக நேற்று முன்தினம் ஒரு தேர் மட்டும் இழுத்து சிறிய அளவில் திருவிழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் 7 தேர் அலங்கரித்து பெரிய அளவில் புனித செபஸ்தியார்  ஆலய திருவிழா கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story