9-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்;போக்சோ சட்டத்தில் கார் டிரைவர் கைது
குலசேகரம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
குலசேகரம் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பள்ளி மாணவி
நாகர்கோவில் அருகே உள்ள தெற்கு சூரங்குடியை சேர்ந்தவர் வினோத் (வயது 31), கார் டிரைவர். இவர் குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதிக்கு கடந்த மாதம் 4-ந்தேதி சென்றார். அப்போது அந்த வழியாக பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சென்று கொண்டு இருந்தாள்.
உடனே வினோத் அந்த மாணவியை சைகை காட்டி வரவழைத்து பேசினார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அந்த மாணவியை வினோத் பின்தொடர்ந்து சென்று பேசினார். அப்போது 14 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியதாகவும், அந்த பேச்சில் மயங்கிய மாணவி அதற்கு சம்மதித்ததாகவும் தெரிகிறது.
பாலியல் பலாத்காரம்
அதன்பிறகு கடந்த 6-ந் தேதி பொன்மனை ஜங்சனுக்கு வருமாறு மாணவியிடம் வினோத் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து மாணவி பாட்டி வீட்டுக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு பொன்மனை ஜங்சனுக்கு சென்றார்.
அங்கு ஏற்கனவே வந்து தயாராக இருந்த வினோத், மாணவியை ஒரு பஸ்சில் தெங்கம்புதூரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.மறுநாள் மாலையில் அந்த மாணவியிடம் திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்வதாக வினோத் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து ஒரு பஸ்சில் ஏற்றி மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கார்டிரைவர் கைது
இரவு வீட்டுக்கு வந்த மாணவி, நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் கூறினார். உடனே தாயார், மாணவியை அழைத்துக் கொண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதில் எனது மகளை வினோத் கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசி விசாரணை நடத்தி, வினோத்தை பிடித்து, போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.
Related Tags :
Next Story