நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
நூலகம் அமைக்க புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு போலீசார் சார்பில் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட துணை சூப்பிரண்டு வசதிராஜ் கலந்துகொண்டு பள்ளியில் நூலகம் அமைப்பதற்கு புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.மேலும் புத்தகங்கள் படிப்பதன் அவசியம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராவது, கல்வி கற்கும் முறை புத்தகங்களை எவ்வாறு படிப்பது என்பன உள்ளிட்டவைகள் குறித்தும் பேசினார். மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story